Sunday, 3 November 2019

விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதற்காக கற்காதே, நீ கற்றது உன்னை விஞ்ஞானி ஆக்கும்.





விழித்தெழு தமிழா உனக்காக எனது கரங்கள் இந்த கட்டுரையாக,


        கல்வி கற்பது எதற்கு? அதை எப்படி கற்க வேண்டும்? இப்பொழுது நாம் சரியான புரிதலோடு கற்கிறோமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் என் புரிதலின்படி என் சொந்த கருத்தை எளிமையான உரைநடையில் இக்கட்டுரையில் பதிலாக பதிவிட்டிருக்கிறேன், வாசகர்கள் இக்கட்டுரையை படித்து விட்டு கல்வி கற்பதை பற்றிய உங்கள் மேலான கருத்தையும் தெரிவிக்கலாம்.

எதற்கு கல்வி கற்க வேண்டும்?

படிப்பு எதற்கு என்று ஒரு 5ம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் டாக்டர் , என்ஜினீயர் ஆவதற்கு அல்லது வேலைக்கு போக என்று சொல்வான், காரணம் அவன் அவ்வாறு வழிநடத்தப்பட்டிருக்கிறான், படிக்க வைக்கும் பெற்றோரும் சரி கற்று கொடுக்கும் ஆசிரியரும் சரி எதற்கு கற்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

சரி எப்படி தெளிவு படுத்த வேண்டும்?

1ஆம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை நீ படிப்பது  முதலில் கற்க வேண்டிய அடிப்படையான கல்வி ஆகும். நீ கற்கும் கல்வியானது  வருங்காலத்தில் நீ வேலைக்கு செல்வதற்கு அல்லது தொழில் செய்து பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்ள பல கோடி விஷயங்கள் உள்ளன, அவற்றை பற்றி தெரிந்து கொள்ளத்தான் என்பதை புரிய வைக்க வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,
  • 1ஆம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை கல்வியை கற்கின்றோம் 
  • 6ஆம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை சற்று கூடுதலான அடிப்படை கல்வியை கற்கின்றோம். 
  • 11ஆம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பிடித்த பாடப்பிரிவு துறைவாரியாக சற்று நுணுக்கம்மாக கல்வியை கற்கின்றோம்.
  • கல்லூரியில் வேலைக்கு செல்வதற்கு தேவைப்படும் அடிப்படையான  துறைவாரியான கல்வியை கற்கிறோம்.
  • வேலைக்கு செல்லும் பொழுது நாம் படித்த படிப்பின் அடிப்படை சற்று பயன்படும், மற்ற அனைத்தும் வேலைக்கு செல்லும் இடத்த்தில் பயிற்சி கொடுத்துவிடுவர்.
  • படிப்பை முடித்தவுடன் வேலைக்கு செல்லலாம் அல்லது விஞ்ஞானி ஆகலாம் அல்லது விவசாயி ஆகலாம் அல்லது  விளையாட்டு வீரராகலாம் என அவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அனைத்தை பற்றியும் கூற வேண்டும், அவன் மட்டும் தான் அவனது வாய்ப்பை தேர்ந்தெடுக்கவேண்டும், அப்பொழுதுதான் அவனது ஆர்வம்  விருப்பமானது முயற்சியாய் மாறி, நீங்கள் நினைத்ததை விட மேலே முன்னேறி வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். நாம் எதற்கு கல்வி கற்க வேண்டும் என்பதை இப்படி தெளிவு படுத்தலாம்.

எப்படி கற்க வேண்டும்?

                    "விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதற்காக கற்காதே,  நீ கற்றது உன்னை விஞ்ஞானி ஆக்கும்"

இதற்கான விளக்கம் நுணுக்கமான கற்றல் மூலம் மட்டுமே ஒன்றை பற்றிய ஆழ்ந்த புலமை கிடைக்கும் அது  உன் மூளையை தூண்டி ஒன்றுடன் ஓன்று பொருந்தி பார்த்து   புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் எனவே நீ கற்பதை சரியாக நுணுக்கமாக கற்றால்  அது உன்னை தானாகவே விஞ்ஞானி ஆக்கும்.

சாதாரண அடிப்படை கற்றல் அல்லாமல் நுணுக்கமான கற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்:

  • நீர் என்பது  H2O.
  • H2O என்பது 2 ஹைட்ரஜன் மூலக்கூறு மற்றும் 1 ஆக்சிஜன் மூலக்கூறு ஆகும்.
  • ஹைட்ரஜன் வாயுவை பிடித்து பலூனில் அடைத்து விட்டால் மேல் நோக்கி செல்லும், இதை நம் ஊர் திருவிழாக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். 
  • ஆக்சிஜன் என்பது நாம் சுவாசிக்கும் வாயு ஆகும்.
  • நீரிலிருந்து ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் மின்னாற்பகுத்தலின் மூலம் தனித்தனியே பிரிக்க இயலும். 
  • ஹைட்ரஜன் காற்றை விட 14 முறை அடர்த்தி குறைவு எனவே தான் பலூன் மேலே செல்கிறது. 
  • 2 ஹைட்ரஜன் மற்றும் 1 ஆக்சிஜன் சாதாரணமாக நீராக மாறாது, நீராக மாற வேண்டும் என்றால் 2ஹைட்ரஜன் 1ஆக்சிஜன் மூலக்கூறுகள் பல கோடி முறை மோதி கொள்ளும் அந்த மோதலில் ஒரு சில மோதலினால் ஏற்படும் வெப்பத்தினால் ஒரு நீர் துளி உருவாகும், தகுந்த இயற்க்கை சூழ்நிலை  இருந்தால்தான் மழை நீர் உண்டாகும், இயற்கையை தாண்டி செயற்கையாக மழையை உருவாக்க முயன்றால், காலம் தவறி மழை பெய்யும், அல்லது மழையே பெய்யாது இது இயற்க்கை சூழ்நிலையை சிதைப்பதற்கு சமம் ஆகும்.
  • ஹைட்ரஜனை சுத்தமான எரிவாயுவாக பயன்படுத்த இயலும், ஹைட்ரஜன் வாயுவை  மின்னாற்பகுதல் மூலம்  பிரித்து வீட்டுக்கு தேவையான சமையல் எரிவாயுவாக பயன்படுத்தலாம். 
  •   இன்று வரை செய்திகளில் வருகின்றது பள்ளி மாணவர்கள் வாகனத்தை நீரின் மூலம் இயக்கி சாதனை என்று அவர்கள் ஹைட்ரஜன் வாயுவை  மின்னாற்பகுதல் மூலம்  பிரித்து வாகனத்தில் புகுத்தி இயக்குகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்கள்தான் கல்வியை முறையாக நுணுக்கமாக கற்று செய்து காட்டி வருகின்றனர், வெற்றியும் அடைகின்றனர், நான் சொல்வது அப்படிப்பட்ட கல்வியை தான், பின்னாளில் ஹைட்ரஜன் எரிபொருள் தான் பிரதான எரிபொருளாக இருக்கும் காரணம் இப்பொழுதுள்ள பெட்ரொல் நிலக்கரி என அனைத்தும் தீர்ந்தவுடன் அணைத்து பெருமுதலாளிகளின் பார்வையும் ஹைட்ரஜன் எரிவாயு பக்கம் திரும்பும் அதனால்தான் என்னவோ எந்த அரசியல் அமைப்புகளும் வாகனத்தை நீரின் மூலம் இயக்கி காட்டும் மாணவர்களை கண்டு கொள்ளவில்லை.
  • இப்படி ஹைட்ரஜன் ஆக்சிஜனின் பயன்பாடு அதிகம் உள்ளது நான் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே இங்கு கூறியிருக்கிறேன் கண்டுபிடிக்காத பயன்பாடும் அதிகம் உள்ளது 
  • இன்றைய காலகட்டத்தில் ஒன்றை பற்றி ஆழ்ந்த நுணுக்கமான அறிவை பெற இணையத்தளம் பெரும் பங்காற்றுகின்றது அதை சரியாக பயன்படுத்த இன்றய தலைமுறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றை பற்றிய ஆழ்ந்த நுணுக்கமான புலமை பெற்றுவிட்டால் ஏதோ ஒரு நேரத்தில் அந்த ஆழ்ந்த அறிவு வெளிப்படும் புதிய கண்டுபிடிப்பு உருவாகும், எனவே அனைத்தை பற்றியும் மேலோட்டமான அறிவை பயன்படுத்தாமல் ஆழ்ந்த அறிவு சிந்தனை இருக்க வேண்டும், இதைத்தான் அப்துல் கலாம் கனவு காண வேண்டும் என்று கூறுகின்றார், 
நமது கல்விமுறை என்பது மேலோட்டமான அடிப்படை கல்வியைத்தான் நமக்கு போதிக்கும் நம்மிடத்தில்தான் உள்ளது எப்படி கற்க வேண்டும் என்று.

வாழ்வியலுடன் தொடர்புடைய அனுபவ கல்வி:

பள்ளி மற்றும் கல்லூரி கல்வி மட்டும் போதாது அதனுடன் சேர்த்து வாழ்வியலுடன் தொடர்புடைய அனுபவ கல்வியையும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் கற்று தர வேண்டும். உதாரணமாக, சிறுவயதில் அருகில் உள்ள கடைக்கு சென்று வர கற்று தரலாம், நாம் வங்கிக்கு செல்லும் பொழுது உடன் அழைத்து சென்று கற்று தரலாம், பேருந்து மற்றும் ரயில் வண்டியில் பயணம் செய்ய பழக்கலாம், அரசு அலுவலகங்களுக்கு அழைத்து சென்று என்னென்ன வேலைகள் நடைபெறுகின்றது என கற்று தரலாம். கலைக்டர் அலுவலகம் அழைத்து சென்று என்னென்ன வேலைகள் கலைக்டருக்கு கீழ் உள்ளவர்கள் செய்கிறார்கள் என புரியவைக்கலாம். முக்கியமாக நமது அரசு நமக்காக என்னென்ன சலுகைகள் வழங்குகின்றனர் என்பதை கூறலாம். நாம் என்ன வேலை செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பதையும், வேலை தொடர்பான நமது அனுபவத்தையும் கற்றுத்தரலாம். இவை மட்டும் போதாது புதிதாக ஒருவரை நாம் சந்திக்கிறோம் என்றால் எப்படி அவரை அணுக வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதையும் கற்றுத்தரவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதை கற்று கொடுத்தாலும் நேர்மையுடன் கூடிய ஒழுக்கத்தையும் கற்று தரவேண்டும். நமது கற்பிதலானது பிற்காலத்தில் அவன் யாருடைய துணையும் இல்லாமல் தனி ஒருவனாக அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கவேண்டும்.                                                                                             
எழுத்து,
சுரேஷ்.




6 comments: