Friday, 8 November 2019

தங்கம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்


தங்கம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் :



தங்கம் நம்  வாழ்வில் ஓர் அங்கம் ஆகிவிட்டது, எனவே அதை வாங்கும் முன் தங்கத்தை பற்றி முழு தகவல்களையும் அறிந்துகொண்டு வாங்குவது சிறந்தது.


முதலில் தங்கத்தின் தனித்தன்மையை பற்றி பார்ப்போம்:


  • தங்கம் மற்ற உலோகம் போல அல்லாமல் அதிக தனித்தன்மை பெற்றிருக்கிறது. தங்கத்தை நீர், காற்று, நெருப்பு, இரசாயன திரவம் (இராசதிராவகத்தை தவிற), என எதனாலும் அதன் தனித்தன்மை பாதிக்காத உலோகம் ஆகும். 
  • தங்கம் இராசதிராவகம் எனப்படும் நைட்ரிக் அமிலம் 1 பங்கும்,ஹைட்ரொகுளோரிக் அமிலம் 2 பங்கும் சேர்ந்த கலவையில் மட்டுமே கரையும்.
  • தங்கம் பல வருடம் தண்ணீரில் அல்லது நிலத்தடியில் இருந்தாலும் அதனுடைய தன்மையை இழக்காமல் இருக்கும்.
  • தங்கம் மற்ற உலோகத்தை விட அதிகம்  மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது.
  • தங்கத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும்  பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
  • தங்கம் நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது சிறிதளவு தங்கத்தை(சுத்த தங்கத்தை) நாம் விழுங்கினாலும் அது நம் உடலை பாதிக்காது அப்படியே வெளியேறிவிடும்.

தங்க நகை கடைக்கு சென்று சுத்த தங்கத்தில்(pure gold) நகை கேட்காதீர்கள் !
சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது, ஏனெனில் தங்கம் மென்மையான உலோகம், அதில் வெள்ளி அல்லது செம்பு போன்ற உலோகம் கலந்தால்தான் அதற்கு உறுதி தன்மையும் கெட்டி தன்மையும் கிடைக்கும். எனவேதான் சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது


காரட் என்ற அலகால் தங்கத்தின் மதிப்பை  கணக்கிடுகின்றனர்.

1
காரட் மதிப்பை கண்டறிவதற்கான கணக்கு:
99.99/24kt = 4.166கிராம்
  
1காரட் என்பது 4.166கிராம் சுத்த தங்கம் ஆகும்

24 காரட் என்பது 99.9% சுத்த தங்கம் ஆகும் இதில் 1% வேறு உலோகம் இருக்கும் 24காரட்ல்  நகை செய்தாலும் அவை எளிதில் சேதமடையக்கூடியவை ஆகும். (24*4.166 = 99.9).

22 காரட் என்பது 91.6% சுத்த தங்கம் ஆகும் இதில் 8.4% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் எனவேதான் 22காரட் நகை ஓரளவுக்கு  உறுதி தன்மை கெட்டித்தன்மையுடனும்  இருக்கும். (22*4.166 = 91.6). ( வேறு உலோகம் கலக்க காரணம் நகையின் கெட்டித்தன்மைக்கும் உறுதித்தன்மைக்கும்).


18 காரட் என்பது 75% சுத்த தங்கம் ஆகும் இதில் 25% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் 18kt கெட்டி தன்மையும்  உறுதி தன்மையும் நன்றாகவே  இருக்கும். (18*4.166 = 75).


14 காரட் என்பது 58.5% சுத்த தங்கமும் 41.5% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் (14*4.166 = 58.5).


9 காரட்  என்பது 37.5% சுத்த தங்கமும் 62.5% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் (9*4.166 = 37.5)

  • காரட் மதிப்பு குறைய குறைய தங்கத்தின் உறுதித்தன்மையும் கெட்டித்தன்மையும் அதிகமாக இருக்கும்.
  • காரட் மதிப்பு அதிகமாக அதிகமாக சுத்த தங்கத்தின் அளவு அதிகமாக இருக்கும், உறுதித்தன்மையும் கெட்டித்தன்மையும் குறைவாக  இருக்கும்.
  • அன்றாட உபயோகத்திற்கு நகை வாங்குகின்றோம் என்றால் 18kt நகை வாங்கலாம், எப்பொழுதாவது பயன்படுத்த என்றால் 22kt நகை வாங்கலாம்.
  • கே டி எம் என்பது காட்மியம் என்ற உலோகம் ஆகும். இந்த காட்மியம் உலோகம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. எனவே தற்போது கே டி எம் தங்க நகையை வாங்கி அணியும் மக்களுக்கு சரும வியாதியும் ஒவ்வாமையும் ஏற்படுவதால், இந்திய தர நிர்ணய கழகம் கேடிஎம் நகைகளை தடை செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய தர நிர்ணய கழகத்தால் சான்றளிக்கப்பட்ட  ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட நகைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
  • தங்க நகை முதலீடு அல்ல, நாம் வாங்கும்போதே 30% அதிகமாக கொடுத்துதான் வாங்குகின்றோம்.  எனவே தங்க நகை வாங்கும்போது பேரம்பேசி செய்கூலி, சேதாரத்தை குறைத்து வாங்கவும்
  • தங்கத்தை முதலீடாக சேர்க்கிறீர்கள் என்றால் தங்க காயினாக வாங்காமல்  தங்க கட்டியிலிருந்து வெட்டி வாங்கி கொள்ளலாம், தங்க காயினாக வாங்கினால் 8 கிராம் வாங்க ரூ300 லிருந்து ரூ400 வரை அதிகம் கொடுத்து வாங்கவேண்டி வரும். அதுவே தங்க கட்டியாக வாங்கினால் அதிகமாக எந்த தொகையும் செலுத்த தேவையில்லை 24 கேரட் கட்டியாக  1 கிராமிலிருந்து எத்தனை கிராம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். 
  • தங்க நகைகள் வாங்கும் பொழுது முக்கியமாக பார்க்க வேண்டியது கற்கள் இல்லாமல் அல்லது குறைவான கற்கள் உள்ள நகைகள் வாங்குவது நல்லது மற்றும் தங்க நகைகளில் பொடியின் அளவு குறைவாக இருக்கும் நகைகளாக வாங்குவது சிறந்தது, ஏனெனில் பிற்காலத்தில் அந்த நகையை விற்கிறோம் என்றால் நல்ல விலை கிடைக்கும்.
  • பழைய நகைகளை விற்கிறீர்கள் என்றால் உருக்கி, தர பரிசோதனைக்கு கொடுத்து அதன் தரத்தை அறிந்து விற்றால் ஏமாறுவதற்கு வாய்ப்பில்லை.
  • நகை கடைகளில் பழைய நகையை கொடுத்து புதிய நகையை வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் பழைய நகையில் உள்ள அழுக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மில்லிகிராமும் நகையில் கல் ஏதாவது பதிந்திருந்தால் கற்களின் எடையும், பொடி  அதிகம் வைத்த நகையாக இருந்தால் அதற்க்கும் ஒரு குறிப்பிட்ட அளவு எடையை சேதாரமாக குறைப்பர் அதே நகையை நாம் உருக்கி விற்றால் நமக்கு 10% லிருந்து 15% வரை அதிகமாக கிடைக்கும். 

தங்கத்தின் சுத்த தன்மையை உரைகல், உப்பு, மற்றும் நைட்ரிக் அமிலம் கொண்டு நாம் வீட்டிலேயே பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.

99.99% சுத்த தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 99.99% சுத்த தங்கமும் 0.01% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைகல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைகல்லில் உரைந்த இடத்தில்  மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • உரைந்த இடத்தில் துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் பெரியதாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 99.99% சுத்த தங்கமாகும்.

91.6%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 91.6% சுத்த தங்கமும் 8.4% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Dim Brown, மற்றும்  yellow shade ஆக இருக்கும்.
  • உரைந்த இடத்தை சுற்றி துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் சிறியதாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 91.6% சுத்த தங்கமாகும்.
88%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 88% சுத்த தங்கமும் 12% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உரைந்த இடத்தில்  Dim Brown, ஆக இருக்கும்.
  • உரைந்த இடத்தை சுற்றி துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் நைசாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 88% சுத்த தங்கமாகும்.
85%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 85% சுத்த தங்கமும் 15% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாகவும் இருக்காது கடினமாகவும் இருக்காது இரண்டிற்கும் இடைபட்ட அளவில் இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Brown, கலராக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை நன்றாக தெரியும், துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் சிறிது மங்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 85% சுத்த தங்கமாகும்.
80%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 80% சுத்த தங்கமும் 20% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Bright Brown, கலராக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை பார்வைக்கு அழுத்தமாக தெரியும், துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் சிறிது மாற்றம் இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் பச்சை நிறமாக மாறிவிடும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 80% சுத்த தங்கமாகும்.
75%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 75% சுத்த தங்கமும் 25% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மிக மிக கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில் வெளிறிய நிறமாக இருக்கும்.
  • உரையும் பொழுது துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை சிறிது கலங்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் பச்சை நிறமாக மாறிவிடும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 75% சுத்த தங்கமாகும்.
65%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 65% சுத்த தங்கமும் 35% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மிக மிக கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில் சிவப்பு கலந்த வெண்மை நிறமாக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை பார்வைக்கு அழுத்தமாக தெரியும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை சிவக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் உரை பொங்காமல் மறைந்து கோடு போல தோன்றும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 65% சுத்த தங்கமாகும்.
0% தங்கமே இல்லை என்பதற்கான பரிசோதனை விளக்கம்:

  • தங்கவண்ணபூச்சு செய்யப்பட்ட நகை செம்பு, பித்தளை போன்ற வேறு உலோகத்தினால் செய்யப்பட்டதாக இருக்கும்.
  • உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை அமிலத்தில் கலந்து விடும்.(குறிப்பு: தங்கத்தை தவிற மற்ற உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரைந்துவிடும்).
  • நைட்ரிக் அமிலத்தில் உரை கரைந்துவிட்டால் அதில் தங்கமே இல்லை என்பதை உறுதி செய்யலாம்.

                                                                                                                        எழுத்து,
                                                                                                                         சுரேஷ்.

3 comments: